சூப்-ஸ்நாக்ஸ்-ஜூஸ்

நாரத்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

நாரத்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

நாரத்தங்காய் – 3,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 8,
கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

நாரத்தங்காயை நன்றாக கழுவிய துடைத்த பின்னர் துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கி விடவும்.

வெட்டிய நாரத்தங்காய் துண்டுகளை ஜாடியில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும்.

இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும்.வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு : நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும்.

Show More

Related Articles

Close