சைவம்

சத்து நிறைந்த கேழ்வரகு ரவை உப்புமா

சத்து நிறைந்த கேழ்வரகு ரவை உப்புமா

தேவையான பொருட்கள் :கேழ்வரகு ரவை – 1 கப்
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கு
தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர், வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கேழ்வரகு ரவையை போட்டு 5 நிமிடங்கள் கிளறவும்.அடுத்து அதில் உப்பு, கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி  போட்டு வேக விடவும்.

கேழ்வரகு நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

Show More

Related Articles

Close