சைவம்

வட இந்தியா ஸ்பெஷல் ஷக்கர்கந்தி சாட்

வட இந்தியாவில் ஷக்கர்கந்தி என்று அழைக்கப்படும் சக்கரைவள்ளிக் கிழங்கு சாட் மிகவும் பிரசித்தம். சுவையான ஷக்கர்கந்தி சாட் ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்  :

 

 

 

 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 250 கிராம்
சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

பாத்திரத்தின் தண்ணீர் ஊற்றி சூடானதும், சர்க்கரைவள்ளிக் கிழங்கை முக்கால் பதம் வேகவைக்க வேண்டும்.

வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோலுரித்து சதுரங்களாக துண்டுகள் போடவும்.

அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் தூவி பிசிறிக்கொள்ளவும்.

 

 

 

 

 

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிழங்கு துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பிறகு எடுத்து, சாட் மசாலாத்தூள் தூவி பரிமாறவும்.

இது வட மாநிலங்களில் குளிர்காலத்தில் விற்கப்படும் பிரபலமான சாட். சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு… இந்தப் பருவத்தில் அதிகம் விளையக் கூடியது.

Show More

Related Articles

Close