சூப்-ஸ்நாக்ஸ்-ஜூஸ்

சோயா பருப்பு வடை

தேவையான பொருள்கள்.

சோயா பயறு  – அரை  கப்
கடலைப் பருப்பு – அரை கப்
நறுக்கிய  வெங்காயம் – 1
நறுக்கிய பச்சை  மிளகாய் – 3
பெருங்காயதூள் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவுசெய்முறை.

சோயாவை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
கடலைப் பருப்பை  அரை  மணி நேரம் ஊற விடவும்.
சோயாவையும் கடலைப் பருப்பையும் தண்ணீர் வடிகட்டி, அத்துடன் காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவில் கறிவேப்பிலை சேர்த்து கலந்து வைக்கவும். எண்ணெயை சூடாக்கி கலவையை வடைகளாகத் தட்டி பொரித்தெடுக்கவும்.

சுவையான  சோயா பருப்பு வடை.

Show More

Related Articles

Close