சைவம்

சிறுதானிய முளைகட்டிய பயறு சாலட்

தினமும் சால்ட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 

 

 

 

வரகு – 2 தேக்கரண்டி
பனி வரகு – 2 தேக்கரண்டி
தினை – 2 தேக்கரண்டி
முளைகட்டிய பாசிப்பயறு – 3 தேக்கரண்டி
முளைகட்டிய ராகி – 2 தேக்கரண்டி
முளைகட்டிய வேர்க்கடலை – 1 தேக்கரண்டி
துருவிய கேரட் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை,
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
மிளகு சீரகப் பொடி – 1/4 தேக்கரண்டி

செய்முறை :

பாசிப்பயறு, ராகி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும். இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.

வரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும். அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.

 

 

 

 

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வரகு, பனி வரகு, தினை அரிசியை போட்டு அதனுடன் முளைக்கட்டிய பாசிப்பருப்பு, ராகி, வேர்க்கடலை, துருவிய கேரட், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

சுவையான சிறுதானிய முளைகட்டிய பயறு சாலட்தயார்.

Show More

Related Articles

Close