சைவம்

குழந்தைகளுக்கு விருப்பமான காளான் பாஸ்தா

குழந்தைகள் பாஸ்தா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் சேர்த்து எளிய முறையில் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 

 

 

பாஸ்தா – 150 கிராம்
வெங்காயம் – 1
பூண்டு – 6 பற்கள்
மொசரெல்லா சீஸ் – ¼ கப் (Mozzarella cheese)
கோதுமை / மைதா – 2 மேஜைக்கரண்டி
பால் – 1 கப்
காய்ந்த துளசி – 1 தேக்கரண்டி
காளான் – 200 கிராம்
காய்ந்த ஆர்கனோ – 1 தேக்கரண்டி
நல்ல மிளகு தூள் – தேவையான அளவு
பட்டர் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும். 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து பட்டரை போட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

 

 

 

 

கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சீஸ், நல்ல மிளகு தூள், காய்ந்த துளசி, காய்ந்த ஆர்கனோ மற்றும் உப்பு சேர்க்கவும்.

கடைசியாக வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

காளான் பாஸ்தா ரெசிபி ரெடி.

Show More

Related Articles

Close